நாட்டில் அமுலில் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை, இம்மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை வரை கடுமையாகக் கடைபிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இந்த மாதம் 19 மற்றும் 20ஆம் திகதிகள் விடுமுறை தினங்கள் என்பதால் நீண்ட விடுமுறையுடன் கூடிய வார இறுதியாக அமைந்துள்ளது.
இதனால் அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்துகளைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்புத் தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இன்று (15) முற்பகல், வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே, ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (kandytamilnews.com)
إرسال تعليق