திவிநெகும நிதிமோசடி வழக்கில் இருந்து அமைச்சர் பெசில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகிய இருவரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டில் தொடரப்பட்டிருந்த இந்த வழக்கில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பெசில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
திவிநெகும நிதி மோசடி தொடர்பான வழக்கு இன்று (15) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. (kandytamilnews.com)
إرسال تعليق