ஜூன் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுதல் மற்றும் அற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல்  ஆகியவற்றை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த 8 மனுக்கள் மீதான பரிசீலனைகள் 10 நாட்களாக நடைபெற்ற பின்னர் உயர்நீதிமன்றம் இன்று (02) தனது தீர்மானத்தை அறிவித்தது.

இந்த மனுக்கள் மீதான பரிசீவனைகள் பிரதமர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 5 நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இடம்பெற்றிருந்த,.

இதன் மூலம் பாராளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதியினால் வௌியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியானது என்பதுடன், கலைக்கப்பட்ட பாராளுமன்றம் மீளவும் கூட முடியாது  என்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளதாக கவனத்திற் கொள்ளப்படுகின்றது.

அதேநேரம் புதிய பாராளுமன்றத்தை தெரிவுசெய்வதற்கான தேர்தலொன்று நடத்தப்படுவது அவசியமாகின்றது.

இதன் பிரகாரம் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்க வேண்டியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post