இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை (24) ஞாயிற்றுக்கிழமை நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

ஷஃவால் மாத தலைப்பிறை இன்று (23) தென்பட்டதை அடுத்து நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

காத்தான்குடி, கிண்ணியா, பாணந்துறை மற்றும் மதவாச்சி ஆகிய பிரதேசங்களில் ஷஃவால் மாத தலைப்பிறை தென்பட்டதற்கான ஆதாரங்கள் பதிவாகியுள்ளன.

கொழும்புப் பெரிய பள்ளிவாசலில் இன்றைய மஃரிப் தொழுகையின் பின்னர் இடம்பெற்ற பிறைக்குழு மாநாட்டில் பிறை தென்பட்டமைக்கான தகவல்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து நாளை நோன்புப் பெருநாள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஈத் முபாரக் - ஈதுல் பித்ர்

Post a Comment

Previous Post Next Post