இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று (24) நோன்புப் பெருநாளை கொண்டாடுவதையிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
இலங்கை சமூகத்தில் இஸ்லாமிய சகோதரத்துவம் வரலாறு நெடுகிலும் உலகிற்கு முன்னுதாரணமாகும் என்பதுடன், ஒரு சில தீவிரவாதிகளின் நடத்தைகளினால் அந்த சகோதரத்துவம் பாதிப்படைய இடமளிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தீவிரவாதம் இஸ்லாமிய அடிப்படை பெறுமானங்களுக்கு எதிரானது என்பது உண்மையான இஸ்லாமியர்களின் நம்பிக்கையாகும். எனவே நம்பிக்கையீனம், சந்தேகங்களைக் களைந்து புனித அல்குர்ஆனின் போதனைகளை ஆழ்ந்து பின்பற்றுவதற்கு இந்த ரமழான் சிறந்த சந்தர்ப்பமாகும் என தாம் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வாழ்த்து செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுதவிர முன்னெப்போதும் இல்லாதவகையில் மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கு முழு உலகமும் முகம்கொடுத்துள்ள காலகட்டத்தில் அடுத்த மனிதர்கள் பற்றிய சமூக பிரக்ஞை மற்றும் உளக் கட்டுப்பாட்டின் மூலமே நல்ல சூழலை உருவாக்க முடியும் என்பதே ரமழான் உலகிற்கு வழங்கும் செய்தியாகும் என ஜனாதிபதி எடுத்துக்காட்டியுள்ளார்.
Post a Comment