தமிழகத்தில் வாழ்ந்துவரும் புலம்பெயர் இலங்கையர்கள் பலருக்கு பிறப்புச் சான்றிதழ்களும், குடியுரிமைச் சான்றிதழ்களும் சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ளன.

சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் டிசம்பர் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட விசேட கொன்சியூலர் முகாமின் போதே இந்த ஆவணங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் திருச்சி கோட்டப்பாட்டு, திண்டுக்கல் தொட்டநூத்து, திருநெல்வேலி போகநல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இலங்கையர்களுக்கு 47 பிறப்புச் சான்றிதழ்களும், 20 குடியுரிமைச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச்சில் நடத்தப்படவிருந்த விசேட கொன்சியூலர் சேவை முகாம்கள், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

எனினும், தற்போதைய சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிக்காட்டல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் கருத்திற்கொண்டு சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தினால் 2021 ஒக்டோபர் மாதம் முதல் இந்த நடமாடும் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (kandytamilnews.com)




Post a Comment

أحدث أقدم