தவலம, ஹினிதும பகுதியில் சிறு தேயிலைத் தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 45 சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கங்களுக்காக நவீன இயந்திர உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு மற்றும் சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களை கையளித்ததாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தேயிலை உற்பத்தியின் அபிவிருத்திக்காக கொழுந்து அரிக்கும் நவீன இயந்திரம், அகழ்வு இயந்திரம், நீர் இரைக்கும் இயந்திரம், கவ்வாத்து வெட்டும் இயந்திரம், கிருமி நாசினி இயந்திரம் உள்ளிட்ட 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண, தேயிலை உற்பத்தியாளர் சங்கங்களுக்கு இந்த உபகரணங்களைக் கையளித்துள்ளார்.
இதற்கான நிகழ்வில் தவலம பிரதேச சபையின் தலைவர், உறுப்பினர்கள், சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், தேயிலை சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர். (kandytamilnews.com)
إرسال تعليق