சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள குப்பை மேட்டு பகுதியில் பயணப்பொதி ஒன்றிலிருந்து பெண்ணின் சடலம் இன்று மீட்கப்பட்டது.
இதனையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பில் சப்புகஸ்கந்த பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
(kandytamilnews.com)
إرسال تعليق