கொழும்பிலுள்ள பழமையான குதிரைப் பந்தய திடலின் பார்வையாளர் அரங்க கீழ்ப் பகுதியில் அமைந்திருக்கும் சர்வதேச நிறுவனமொன்றின் உணவகத்தில் இன்று (20) அதிகாலை திடீரென வெடிச் சத்தத்துடன் ஏற்பட்ட தீ சம்பவம் தொடர்பாக பொலிஸார் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த தீ சம்பவம் அதிகாலை 5.30 அளவில் இடம்பெற்றது.

எரிவாயு கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், தீயினால் உணவகம் அமைந்துள்ள கட்டட பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

எனினும், சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

ஆறு தீயணைப்பு சேவை வாகனங்கள் மூலம் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீ அனர்த்தம் குறித்து கறுவாத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (kandytamilnews.com)

Post a Comment

أحدث أقدم