'மெனிக்கே மகே ஹிதே' (Menike Mage Hithe) பாடல் மூலம் YouTube இல் Cover song பதிவினால் சர்வதேச மட்டத்தில் பிரபல்யமடைந்த இலங்கையின் யொஹானி டி சில்வா இந்தியாவில் இசை நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது சிறு காயத்திற்குள்ளானார்.

இந்த தகவலை யொஹானி தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று முன்னர் பதிவிட்டுள்ளார்.

இசை நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் கிட்டார் கருவி முகத்தில் பட்டதால் அவரது வலதுபுற கண்ணுக்குக் கீழான பகுதியில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

எனினும், தனது ரசிகர்களுக்காக எதையும் பொருட்படுத்தாமல் தாம் செயற்பட்டதாகவும் யொஹானி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.  (Kandy Tamil News)

Post a Comment

Previous Post Next Post