நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா சற்று நேரத்திற்கு முன்பாக இலங்கையை வந்தடைந்தார்.

இலங்கை வௌிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே விடுத்த அழைப்பின் பிரகாரம் இந்திய வௌியுறவு செயலாளரின் இலங்கைக்கான விஜயம் அமைந்துள்ளது.

இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தல், இந்திய அரசாங்கத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதில் கூட்டாக செயற்படுதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என இந்திய வௌியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.  (Kandy Tamil News)

Post a Comment

Previous Post Next Post