லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து லாஃப் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி லாஃப் எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று திங்கட்கிழமை முதல் (11) அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப் சமையல் எரிவாயு  சிலிண்டரின் விலை 98 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 2,840 ரூபாவாகும்.

தமது 5 கிலோகிராம் கேஸ்எரிவாயு சிலிண்டரின் விலையையும் 393 ரூபாவால் உயர்த்தியுள்ள லாஃப் கேஸ் நிறுவனம், அதன் புதிய விலை 1,136 ரூபாவாகும் என மேலும் அறிவித்துள்ளது. (kandytamilnews.com)

Post a Comment

أحدث أقدم