இலங்கைக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வௌியுறவு செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று (03)திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய் குதங்களைப் பார்வையிட்டுள்ளார்.

கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு இன்று காலை சென்றிருந்த இந்திய வௌியுறவு செயலாளர் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கான விஜயத்தை அவர் மேற்கொண்டிருந்ததாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை விஜயத்தின்போது அவர் அங்குள்ள LIOC நிறுவனத்தினால் பராமரிக்கப்பட்டு வரும் எண்ணெய்க் குதங்களைப் பார்வையிட்டார். அங்கு எண்ணெய்க் குதங்கள் தொடர்பாக இந்திய வௌியுறவு செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து LIOC நிறுவனத்தின் புதிய உற்பத்தியான 'Serve Pride ALT 15W-40' என்ற எண்ணெய் வகையை இந்திய வௌியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷரிங்லா அறிமுகப்படுத்தி வைத்தார். (Kandy Tamil News)



Post a Comment

أحدث أقدم