புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்து புதிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்த இலங்கையின் விஞ்ஞானி ஒருவர் னது குடும்பத்தாருடன் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படும் நிலைமையை எதிர்கொண்டுள்ளார்.

இலங்கையில் குறித்த விஞ்ஞானி துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவித்து  பிரித்தானிய உள்துறை அலுவலகத்தில் முன்வைக்கப்பட்டிருந்த வழக்கில் சாதகமான முடிவு கிடைக்கவில்லை என 'த கார்டியன்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

47 வயதான டொக்டர் நடராஜா முகுந்தன், அவரது மனைவி (42) மற்றும் 13, 9, 5 வயதுகளையுடைய மூன்று பிள்ளைகள் ஆகியோரே பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.

இவர்கள் இலங்கையில் இருந்து 2018 ஆம் ஆண்டில் பிரித்தானியாவை சென்றடைந்துள்ளனர்.

சூரியசக்தி மூலங்கள் தொடர்பான பணியை முகுந்தன் மேற்கொண்டிருந்ததுடன், பொதுநலவாய நாடுகளின் ரதர்ஃபோர்ட் நிதியுதவிக்காவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

இந்த நிதியுதவித் திட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இரண்டு வருட அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன், அவரது மனைவிக்கும் வயோதிபர் பராமரிப்பு நிலையமொன்றில் தொழில் கிடைத்திருந்தது.

இதன் பின்னர் 2019 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் முகுந்தன் சுகவீனமுற்றிருந்த தனது தயாரைப் பார்ப்பதற்காக இலங்கைக்கு குறுகியகால பயணத்தில் ஈடுபட்டதுடன், இதன்போது நாட்டில் கைதுசெய்யப்பட்டதாகவும், பின்னர் தப்பி மீண்டும் பிரித்தானியாவுக்கே வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக தன்னுடைய புலமைப்பரிசில் 2020 பெப்ரவரியில் நிறைவடைந்ததுடன், தனக்கு புகலிடம் வழக்குமாறு பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முகுந்தனுடைய புலமைப்பரிசில் திட்டம் 2020 பெப்ரவரி மாதம் நிறைவடைந்த பின்னர் அவருக்கும், அவருடைய மனைவிக்கும் தொழில்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த பின்புலத்தில் முகுந்தனுடைய புகலிடக் கோரிக்கை தொடர்பில் நேர்த்தியான கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக செப்டெம்பர் 20 ஆம் திகதி உள்துறை அலுவலகத்தினால் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஒக்டோபர் 11 ஆம் திகதி முகுந்தனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மற்றுமொரு மின்னஞ்சல் ஊடாக, ஓகஸ்ட் 23 ஆம் திகதி அவருடைய புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையின் கீழ் முகுந்தன் தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு நாடு கடத்தப்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக 'த கார்டியன்' பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது. (kandytamilnews.com)


Home Office criticised over handling of Sri Lankan scientist’s asylum claim

Sri Lankan family in UK faces deportation

Post a Comment

أحدث أقدم