கொவிட் தடுப்பூசியை முழுமையாக ஏற்றிக்கொண்டவர்களுக்கான டிஜிட்டல் அட்டை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
டிஜிட்டல் அட்டை விநியோகித்தலுக்கான வழிமுறைகளைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் முழுமையான தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட வௌிநாடுகளுக்கு செல்லும் எதிர்ப்பார்ப்புடன் இருப்பவர்களுக்கான டிஜிட்டல் அட்டைகளை விநியோகித்தல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரை மற்றும் குறியீட்டு நியமங்களுக்கு அமைவாக டிஜிட்டல் அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
கொவிட் தடுப்பூசி ஏற்றியமைக்காக வழங்கப்படும் டிஜிட்டல் அட்டை போன்று போலி அட்டையைத் தயாரிக்க முடியாதவாறு முழுப் பாதுகாப்புடன் அவை தயாரிக்கப்பட்டுள்ளன.
QR குறியீட்டின் மூலம் டிஜிட்டல் அட்டையில் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(kandytamilnews.com)

Post a Comment