உடனடியாக இலங்கையை மூன்று வாரங்களுக்காவது முடக்குமாறு ஆளும் பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் 10 பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதியை கூட்டாக வலிறுத்தியுள்ளன.
இதுதொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மஹஜர் ஒன்றை அந்தந்த பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அனுப்பியுள்ளன.
கொவிட்-19 வைரஸ் தொற்று மிகவும் வேகமாக பரவிவரும் தற்போதைய சூழ்நிலையில், வைத்தியசாலைகளில் ஏற்பட்டுளள் நெருக்கடி நிலை மற்றும் கொவிட் உயிரிழப்புகள் ஆகியவற்றை கவனத்திற்கொண்டு 10 கட்சிகளும் ஜனாதிபதியிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.
இதன்பிரகாரம் அபே ஜனபல கட்சியின் அத்துரலியே ரதன தேரர், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணாயக்கார, லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான அமைச்சர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரான அமைச்சர் உதய கம்மன்பில, தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, மக்கள் ஐக்கிய முன்னணி தலைவர் டிரான் அலஸ், ஶ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜீ. வீரசிங்க, ஶ்ரீலங்கா மஹஜன கட்சித் தலைவர் அசக நவரத்ன, யுத்துகம தேசிய அமைப்பின் தலைவர் கெவிந்து குமாரதுங்க ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூட்டாக யையெழுத்திட்டுள்ளனர். (KandyTamilNews)
ஜனாதிபதிக்கு 10 பங்காளிக் கட்சிகளினால் கூட்டாக அனுப்பப்பட்டுள்ள கோரிக்கையின் பிரதிகள் பின்வருமாறு,



إرسال تعليق