![]() |
| Picture courtesy: SLC |
லங்கா பிரீமியர் லீக் - 2 (LPL2 ) இல் பங்கேற்பதற்கு முன்னணி வீரர்கள் அடங்கலாக 11 கிரிக்கெட் விளையாடும் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இம்முறை ஆரம்வம் காட்டியுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) நிரல்படுத்தலில் இடம்பிடித்துள்ள முன்னணி சகலதுறை ஆட்டக்கார்கள் பலர் லங்காபிரீமியர் லீக்கில் விளையாடுவதற்காக தங்களை பதிவுசெய்துகொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சுட்டிக்காட்டியுள்ளது.
பங்களாதேஷ் வீரரான ஷாகிப் அல் ஹசன், அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீரர்களான பென் கட்டிங் மற்றும் ஜேம்ஸ் ஃபோல்க்னர், தென்னாபிரிக்காவின் தேசிய ODI மற்றும் T20 அணிகளின் தலைவரான டெம்பா பவுமா ஆகிய முக்கிய வீரர்கள் LPL2 இல் விளையாட தங்களின் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்திய வீரரான யூசுப் பதான், ஸிம்பாப்வே வீரர் பிரென்டண் டெய்லர், நேபாள் வீரர் சந்தீப் லமிச்சேன், ஐக்கிய அமெரிக்காவின் அலி கான், உள்ளிட்ட பலரும் LPL2 இல் விளையாடுவதற்கான தங்களின் ஆர்வத்தை வௌிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் லங்கா பிரீமியர் லீக்கில் (LPL2) விளையாடுவதற்காக தங்களைப் பதிவுசெய்துள்ள வீரர்களது பெயர்களை நாடுகளின் வகைப்படுத்தலுக்கு அமைவாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
- பங்களாதேஷ் - தமீம் இக்பால், மெஹ்தி ஹசன் மிராஸ், தஸ்கின் அஹமட், லிட்டன் தாஸ், சௌம்யா சர்கர்
- அவுஸ்திரேலியா - உஸ்மான் கவாஜா, பென் டியுன்க், கெலம் ஃபெர்கஸன்
- மேற்கிந்திய தீவுகள் - ஷெல்டன் கொட்ரல், ரயாட் எம்ரிட், ரவி ராம்போல், டுவேய்ன் ஸ்மித், டினேஷ் ரமடின், ஜோன்சன் சார்ல்ஸ், ரொவ்மன் பவெல்
- பாகிஸ்தான் - ஹாரிஸ் சொஹைல், வகாஸ் மக்ஸூட், முகம்மட் ஹசன், மொஹமட் இர்பான், சொஹைப் மக்ஸூட், ஷான் மசூட், அன்வர் அலி, அம்மாட் பட்
- தென்னாபிரிக்கா - ரிலீ ரொஸ்ஸோவ், டேவிட் வீஸ், ஜொன் ஜொன் ட்ரிவர் ஸ்மட்ஸ், மோர்ன் மோக்கெல், வேன் டர் டுசேன், கேஷவ் மகராஜ், டப்ரைஸ் ஷம்சி, ஹார்டஸ் வில்ஜோன்.
- ஆப்கானிஸ்தான் - அஸ்கர் ஆப்கான், மொஹமட் ஷஸாட், நஜிபுல்லாஹ் ஸட்ரான், நவீன் உல் ஹக், உஸ்மான் ஷின்வாரி, ரஹ்மதுல்லா குர்பாஸ், ஹஸ்ரதுல்லா ஸஸய், கைஸ் அஹமட்

إرسال تعليق