ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக சற்று நேரத்திற்கு முன்னர் பதவிப்பிரமாணம் செய்தார்.
பாராளுமன்றம் இன்று (23) முற்பகல் 10 மணிக்கு கூடியபோது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் ரணில் விக்ரமசிங்கவின் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
பாராளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட ஒரேயொரு ஆசனத்திற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுப்பினராகியுள்ளார்.

إرسال تعليق