பார்வையாளர்கள் எவரும் அனுமதிக்கப்படாத நிலையில் 2020 ஒலிம்பிக் விழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது.

எனினும், ஒலிம்பிக் விழா மைதானத்தில் இருக்கைகள் காலியாகவே இருந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இன்றைய ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் ஆயிரத்துக்கும் குறைவான முக்கியங்தர்கள் மாத்திரமே கலந்துகொண்டிருந்ததாக ஒலிம்பிக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையில் ஆரம்ப விழாவை ஜப்பான் மிகவும் கோலாகலமாக நடத்தியதுடன், அந்த நாட்டின் பாரம்பரிய கலாசார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையிலான நிகழ்வுகள் நடைபெற்றன.

இது இவ்வாறிருக்க, ஒலிம்பிக் நிகழ்வுகளில் பங்கேற்கும் போட்டியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என 80 க்கும் அதிகமானவர்களுக்கு இதுவரை கொவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக பீ.பீ.சீ. தெரிவிக்கின்றது.







Post a Comment

أحدث أقدم