65 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா தொகையுடன் 3 சந்தேகநபர்களை வடபகுதி கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள கடற்பரப்பில் நேற்று (25) கடற்படையினர் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையின்போதே கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைத் தரப்பு தெரிவிக்கின்றது.

இதன் பிரகாரம் சுமார் 216 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் 3 பேர் கைதுசெய்யப்பட்டதுடன், டிங்கி படகொன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது குறிப்பிட்ட டிங்கி படகு கரையோரத்தை நோக்கி வந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனையில், படகிலிருநது 6 உரப் பைகளில் பொதியிடப்பட்டிருந்த 216 கிலோ 750 கிராம் கேரள கஞ்சா தொகை மற்றும் 19 கிலோகிராம் காய்ந்த மஞ்சல் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

சர்வதேச கடல் எல்லையில் வைத்து, சந்தேகநபர்கள் கஞ்சா தொகையை டிங்கி படகிற்கு ஏற்றியிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

காங்கேசன்துறை, வலலாய் பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 34 வயதுக்கிடைப்பட்ட சந்தேகநபர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கட்ல் மார்க்கமாக முன்னெடுக்கப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்காக கடற்படையினர் இலங்கை கடற்பரப்பிற்குள் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.









Post a Comment

أحدث أقدم