இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளை ஜூலை 21 ஆம் திகதி கொண்டாடுவார்கள் என முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாத தலைப்பிறை (10-07-2021) நாட்டின் எந்தவொரு பாகத்திலும் தென்படாத காரணத்தினால் ஹஜ்ஜுப் பெருநாள் 21 ஆம் திகதி என முஸ்லிம் உலமாக்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து ஹஜ்ஜுப் பெருநாள் தொடர்பில் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன.

இதன் பிரகாரம் துல்ஹஜ் மாத முதலாம் தலைப்பிறை எதிர்வரும் திங்கட்கிழமை 12 ஆம் திகதி என முஸ்லிம் தரப்புகளால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


#hajj #hajj2021 #hajjflight #hajjmubarak  #hajjgift #hajji #hajjpackage #hajjah #hajjsouvenir #hajjlive #Hajjiyat #HajjStampede #hajjtheme #hajjflights #hajjeh #hajjdress #HajjDesignless #hajjandumrah

Post a Comment

أحدث أقدم