தேசிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளரான கிரான்ட் புளோவருக்கு COVID-19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

COVID-19 தொற்றின் அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து இன்று (08) அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையி்ல் தொற்று  இருப்பது உறுதியானதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் குழாமின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் புளோவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم