பிரித்தானியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புகளை முன்னெடுப்பதற்குரிய சந்தர்ப்பங்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாராஹ் ஹல்டன் ஆகியோரிடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான சந்தர்ப்பங்கள் குறித்து ஜனாதிபதியை சந்தித்ததாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாராஹ் ஹல்டன் தனது உத்தியோகபூர்வ Twitter தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்-19 மற்றும் காலநிலை மாற்றம் போன்ற விடயங்களில் நிலவும் சவால்களை எதிர்கொள்வதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் சிக்கல்கள் குறித்து தமக்கிடையே கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் நல்லாட்சி மற்றும் மனித உரிமைகள், வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சாராஹ் ஹல்டன் தனது டுவிட்டர் தளத்தில் மேலும் கூறியுள்ளார்.

إرسال تعليق