ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையை நள்ளிரவு (22) முதல் 5 ரூபாவால் குறைப்பதற்கு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜைகளான தமது வாடிக்கையாளர்களின் நலன்கருதி பெற்றோலின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஐ.ஓ.சி நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், டீசலின் விலையில் மாற்றம் இல்லையென்பதுடன், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு ஈடாக இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றரின் விலை 137 ரூபாவிற்கு விற்கப்படவுள்ளது.

பொருளாதாரத்தை மீளமைக்கும் நோக்கில், பெற்றோல் இறக்குமதி வரி அதிகரிப்பிற்கு மத்தியிலும் நட்டத்தை தாமே பொறுப்பேற்று வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளதாக அந்த நிறுவனம் சுட்க்காட்டியுள்ளது.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான முதலாவது காலாண்டில் உலக சந்தையில் ஏற்பட்ட சரிவினால் தமக்கு 346 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.


Post a Comment

أحدث أقدم