கொவிட்-19 தொற்று காரணமாக 10 ஆவது மரணம் இலங்கையில் இன்று (25) பதிவாகியது.

குவைத்தில் இருந்து நாட்டிற்கு வருதை தந்திருந்த பெண்ணொருவர் கொவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டு, திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

51 வயதுடைய இருதய நோயாளரான பெண் ஒருவரே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post