ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் மாத்திரமே தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கான அனுமதி ஏற்புடையதாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அநாவசியமாக ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு ஏற்ப வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு இது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, ஏதேனும் ஒரு பிரதேசம் அல்லது கிராமம் இடர் வலயமாக குறிப்பிடப்பட்டிருந்தால் அத்தகைய வலயங்களுக்குள் பிரவேசிக்கவோ அல்லது அங்கிருந்து வெளிச் செல்லவோ எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post