எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் நாட்டின் சகல மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டத்தில் மேலும் தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் மறுஅறிவித்தல் வரை தினமும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை மட்டுமே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுதவிர, செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

நாளை (24) ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை (25) ஆகிய இரண்டு நாட்களும் நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென மேலும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

أحدث أقدم