கொவிட்-19 சுகாதார, சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி ஒரு பில்லியன் ரூபாவையும் தாண்டியுள்ளது.

இந்த நிதியத்திற்கு ஶ்ரீலங்கா டெலிகொம் பீ.எல்.சி மற்றும் மொபிடெல் நிறுவனத்தினால் 50 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான காசோலைகள் ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் ரொஹான் பெர்னாண்டோவினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று (15) கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை, 50 மில்லியன் ரூபாவும், Natrub Industries 10 மில்லியன் ரூபாவும், மேல்நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தினால் 3 இலட்சம் ரூபாவும், முன்னாள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளின் செயலாளர்கள் சங்கம் ஒரு மில்லியன் ரூபாவும், ஶ்ரீலங்கா பொதுஜன பொறியியலாளர்கள் முன்னணி ஒரு மில்லியன் ரூபாவும், இலங்கை கால்பந்து சம்மேளனம்  2 மில்லியன் ரூபாவும் மற்றும் சில தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் என சிலரும் கொவிட் நிதியத்திற்கு இன்றைய தினம் நன்கொடைகளை வழங்கியுள்ளனர்.

இதற்கமைய கொவிட்-19 சுகாதார சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு கிடைத்துள்ள மொத்த நிதி ஒரு பில்லியன் ரூபாவைத் தாண்டியமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

Previous Post Next Post