உலகிலேயே அதிகூடிய இணையத்தள வேகம் அவுஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் தற்போது அங்கு புழக்கத்திலுள்ள வேகத்தைவிட தரவிறக்கம் செய்வதற்கான வேகம் ஒரு மில்லியன் தடவைகளால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக "தி இண்டிபெண்டன்ட்" செய்தித் தளம் தெரிவித்துள்ளது.

அதாவது செக்கனுக்கு 40 டெராபைட் வேகத்தில் 1000 HD திறன்கொண்ட திரைப்படங்களை தரவிறக்கம் செய்ய முடியும் என்பது விசேட அம்சமாகும்.

அவுஸ்திரேலியாவின் இணையத்தள ஆய்வாளர்களால் இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

தரவுகளை பரிமாற்றம் செய்யக்கூடிய வகையில் நூற்றுக்கணக்கான Infrared கதிர்வீச்சுகளைக் கொண்ட "Micro-comb" எனும் சிப் மூலம் இணையத்தள வேகத்தை அதிகரிப்பதற்கான முயற்சியில் மொனாஷ், ஸ்வைன்பர்ன் மற்றும் RMIT ஆகிய பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்கள் வெற்றிகண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post