கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோய் தொடர்பான விஞ்ஞான பிரிவு அறிவித்துள்ளது.

இந்த தகவல் தொற்று நோய் தொடர்பான விஞ்ஞான பிரிவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இன்றிரவு (12) 10.30 க்கு வௌியாகியுள்ளது.

இதன் பிரகாரம் இன்றைய தினம் மொத்தமாக 12 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த 56 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர்.

மேலும் 147 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், இலங்கையில் இதுவரை 07 மரணங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

أحدث أقدم