வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த 4000 கடற்படை உத்தியோகத்தர்களும், அவர்களின் குடும்பத்தார்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த கடற்படை உத்தியோகத்தர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் கொவிட்-19 தொற்று தொடர்பான PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைத் தலைமையகம் அறிக்கையொன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆயினும், கடற்படை உத்தியோகத்தர்களின் சுகாதார நிலைமையுடன் கூடிய பிரச்சினைகள் குறித்து பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுமுறையில் தத்தமது வீடுகளில் இருக்கின்ற கடற்படை உத்தியோகத்தர்களை தொடர்ந்தும் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு அறிவித்தல் விடுப்பதற்கான ஏற்பாடுகளும் கடற்படைத் தரப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேவையான அனைத்து மருத்துவ மற்றும் சுகாதார பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து கடற்படையினரின் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படையினருக்கு வைத்தியசாலையில் அத்தியாவசிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் கடற்படைத் தரப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.



BREAKING: வெலிசர கடற்படை முகாமில் 30 சிப்பாய்களுக்கு வைரஸ் தொற்று உறுதி (VIDEO)
h

Post a Comment

أحدث أقدم