புனித ரமழான் மாத நோன்பு எதிர்வரும் சனிக்கிழமை 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த தகவலை கொழும்பு பெரியபள்ளிவாசல் அறிவித்துள்ளது.

புனித ரமழான் மாத தலைப்பிறை நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று (23) தென்படாத காரணத்தினால் ஷஃபான் மாதத்தை 30 ஆகப் பூர்த்தி செய்வதற்கும், எதிர்வரும் சனிக்கிழமை 25 ஆம் திகதி முதல் புனித ரமழான் மாதத்தைக் கணிப்பதற்கும் கொழும்பு பள்ளிவாசல் பிறைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஒரு மாதகாலத்திற்கு நோன்பு நோற்கவுள்ளனர்.


Post a Comment

Previous Post Next Post