கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியிருந்த மற்றுமொருவர் இன்று (02) உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்ட ஊடக அறிவிக்கையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நிபுணத்துவ வைத்தியர் அனில் ஜாசிங்கவை மேற்கோள்காட்டி இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
58 வயதுடைய ஒருவரே கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளார்.
நியூமோனியா காய்ச்சலால் பீடிக்கப்பட்டு கடுமையான நிலைமையில் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவரே வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் பதிவாகிய நான்காவது மரணம் இதுவாகும்.

إرسال تعليق