கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் இன்று (19) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த 15 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதியானமை குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தகவல் வௌியிட்டுள்ளார்.

இவர்கள், கொரோனா நோயாளர்களுடன் நெருக்கமாக இருந்தமைக்காக கொழும்பில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளது.


Post a Comment

أحدث أقدم