ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அனைத்து தீர்மானங்களையும் ஜனாதிபதி விசேட செயலணியே மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கும் அனைத்து தரவுகளையும் ஆராய்ந்து ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல், ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தும் பிரதேசங்களை தெரிவுசெய்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய பிரதேசங்களை அடையாளப்படுத்துதல் என்பவை அரச உயர் மட்டத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் மூலம் தௌிவுபடுத்தியுள்ளது.

ஏதேனும் ஒரு பிரதேசத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தில் மாற்றம் செய்ய தேவையான தகவல்கள் இருப்பின் அந்த அனைத்து தகவல்களையும் கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மக்கள் வாழ்க்கையை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் எந்தவொரு தீர்மானமும் பிரதேச மட்டத்தில் எடுக்கப்பட முடியாது எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.




Post a Comment

أحدث أقدم