
இந்தியாவின் 65 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு இலங்கையிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகராலய அலுவலகத்திலும் இன்றைய தினம் (15-08-2011) வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகர் ராகேஷ்குமார் மிஷ்ரா தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்ற இந்த வைபவத்தில் கண்டியிலுள்ள இந்திய பிரஜைகள், அலுவலக ஊழியர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
![]() |
| மிஷ்ரா சுதந்திர தின செய்தியை வாசிக்கின்றார் |
இந்திய ஜனாதிபதியின் சுதந்திர தின செய்தியை இதன்போது மிஷ்ரா வாசித்தார். அதனையடுத்து இந்திய கலாசார நிகழ்வுகளும் இந்த வைபவத்தில் இடம்பெற்றன.
அதுதவிர இந்தியாவிலிருந்து கண்டிக்கு வருகை தந்துள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான தேசிய குத்துச்சண்டை வீராங்கனைகளும் இன்றைய சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
| ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்திய தேசிய குத்துச் |

Post a Comment