வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகளில் இடம்பெறும் குற்றங்களுக்காக அறவிடப்படும் அபராதத் தொகை குறித்து தப்பான செய்தியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றதை குறித்து பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர்.
திருத்தப்பட்ட வாகனப் போக்குவரத்து சட்டம் எனும் பெயரில் இந்த விடயம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, வாகனப் போக்குவரத்துக் குற்றங்கள் மற்றும் அபராத தொகைகள் நடைமுறையிலுள்ள சட்டத்திற்கு முற்றிலும் முரணானது என கண்டறியப்பட்டுள்ளது.
போலியாகத் தயாரிக்கப்பட்டு இந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே குறிப்பிட்ட போலியான செய்தியை ஏனையோருக்குப் பகிர்வதைத் தவிர்க்குமாறும், போலிச் செய்திகளைக் கண்டு ஏமாற்றமடைய வேண்டாம் என்றும் பொலிஸார் மக்களை எச்சரித்துள்ளனர். (kandytamilnews.com)
Post a Comment