இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரிடையே பாராளுமன்றத்தில் இன்று (01) சந்திப்பு இடம்பெற்றது.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் இதன்போது கலந்துகொண்டிருந்தார்.

கொவிட் நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தமை தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் அரசாங்கத்துக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். 

இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்கள் தொடர்பில் சபாநாயகர் தனது நன்றியை தெரிவித்ததுடன், இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளிலும் மேலும் விருத்தி செய்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. (kandytamilnews.com)


Post a Comment

Previous Post Next Post