ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை  திட்டத்திற்கு அமைவாக  100,000 கி.மீ  நீள வீதிகளை அபிவிருத்தி  செய்யும்  திட்டத்தின் கீழ் பலாபத்வல-கலேவெல (பி -346)  வீதியை விஸ்தரித்து அபிவிருத்தி  செய்யும் பணிகள் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன்   பெர்னாண்டோவின் தலைமையில்  அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.

12 மாதங்களுக்குள் ரூ. 3,552 மில்லியன் செலவில்  இத்திட்டம் நிறைவு செய்யப்படவுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின்  நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த  வீதி  விஸ்த்தரிக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுகிறது.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மண்ணை  வெட்டி நெடுஞ்சாலைக்கான வீதி அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதை படத்தில்  காணலாம். 

இந்த நிகழ்வில அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் உள்ளிட்ட மாத்தளை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டார்கள். (kandytamilnews.com)

Post a Comment

Previous Post Next Post