பேஸ்புக்கில் இருந்து சிறிது காலத்திற்கு தாம் விலகியிருப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பாக தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இன்று (20) பதிவொன்றின் மூலம் அவர் தௌிவுபடுத்தியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (16) தன்னுடைய இடது கண்ணில் செய்துகொண்ட சத்திரசிகிச்சையின் காரணமாக டிஜிட்டல் திரையைப் பார்வையிடுவதில் இருந்து தவிர்க்குமாறு மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன் காரணமாக பயனர்களின் கருத்துகளுக்குப் பதிலளிக்க முடியாதுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

மீண்டும் ஒக்டோபர் 31 ஆம் திகதியே மருத்துவர் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவிருப்பதால், பேஸ்புக்கில் இருந்து தற்காலிகமாக விலக அவர் தீர்மானித்துள்ளதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. (kandytamilnews.com)



Post a Comment

Previous Post Next Post