மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் (15) மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன.

இதன் பிரகாரம், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர்ந்த ஏனைய வாகனங்களுக்கு அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொள்ள முடியும். 

அண்மையில் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்த அனுமதி பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கு வாகன உரிமையாளர்களுக்கு இன்று 15ஆம் திகதி முதல் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த திணைக்களத்தின் இணையத்தளத்தின் ஊடாக ஒன்லைன் மூலம் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளின் ஊடாகவும் அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என மேல் மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 12ஆம் திகதி முதல் காலாவதியான மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகன உரிமையாளர்கள் டிசம்பர் 31ஆம் திகதிவரை வழங்கப்பட்டுள்ள சலுகைக் காலத்தை பெற்றுக்கொள்ள முடியும் என மேல் மாகாண ஆளுநர் அலுவலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. (kandytamilnews.com)

Post a Comment

Previous Post Next Post