Facebook, Instagram, WhatsApp சமூக ஊடகங்கள் உலகளாவிய ரீதியாக முடங்கியுள்ள நிலையில், அதுகுறித்து தங்களுக்கு அறியக் கிடைத்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் பதிலளித்துள்ளது.

அவற்றை சரிசெய்து மிக விரைவில் வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

தமது சமூக வலைதளங்கள் முடங்கியதால் ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கும் பேஸ்புக் நிறுவனம் பயனர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. (Kandy Tamil News)


Post a Comment

Previous Post Next Post