இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கான பட்டய நிறுவனமொன்றை ஸ்தாபிக்க அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ஊடகவியலாளர்களை தகுதியுடைய தொழில்சார் ஒருமைப்பாடுடையவர்களாக மாற்றுவமே இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்படுவதன் முக்கிய நோக்கமாகும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொழில்சார் மற்றும் நெறிமுறை பயிற்சிகளின் ஈடுபடுவதற்கு விரும்பும் ஊடகவியலாளர்களுக்கு ஒரே இலங்கை கொடியின் கீழ் வழிகாட்டல் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். (Kandy Tamil News)

Post a Comment

Previous Post Next Post