சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிய பெண் பொலிஸ் அதிகாரிகள் மூவர் உடன் அமுலாகும் வகையில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிய ரேணுகா ஜயசுந்தர, நிஷாந்தி ஜயசுந்தர, பத்மினி வீரசூரிய ஆகியோர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில், பெண் பொலிஸ் அதிகாரிகள் பிரதி பொலிஸ்மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. (Kandy Tamil News)

Post a Comment

Previous Post Next Post