நாட்டிலுள்ள முன்னிலை அரிசி ஆலை உரிமையாளர்களால் அரிசிக்கான புதிய சில்லறை விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி,
நாட்டரிசி 01 கிலோகிராம் ரூபா 115
சம்பா அரிசி 01 கிலோகிராம் ரூபா 140 ரூபா
கீரி சம்பா 01 கிலோகிராம் ரூபா 165
எனவும் சில்லறை விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, பொலன்னறுவையிலுள்ள பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசி கொள்வனவு விலைகள் தொடர்பில் புதிய விலைகளை அறிவித்துள்ளனர்.
பொலன்னறுவை மாவட்டத்தில் அரிசி உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒருகிலோகிராம் நாட்டரிசி ரூபா 62.50
சம்பா அரிசி ரூபா 70
கீரி சம்பா ரூபா 80
ஆகிய விலைகளில் கொள்வனவு செய்வதாகவும் விலையறிவிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (Kandy Tamil News)

Post a Comment