ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை ஒக்டோபர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு  நீதவான் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தரவுகளை திட்டமிட்டு அழித்ததாகக் கூறி 'எபிக் லங்கா டெக்னொலோஜீஸ்' நிறுவனத்தின் உதவி மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.


சந்தேகநபரான உதவி மென்பொருள் பொறியியலாளரால் கடந்த ஜூலை 09 ஆம் திகதி வீட்டிலிருந்து 05 மணித்தியாலங்கள் செலவிட்டு ஔடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் (NMRA) தரவுகள் அழிக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல், நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.


இந்த செயற்பாட்டை டிஜிட்டல் பயங்கரவாத செயற்பாடு எனவும் அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

(Kandy Tamil News)

Post a Comment

Previous Post Next Post