திருமணம் உட்பட நிகழ்வுகளுக்கு இன்று (15) மற்றும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நள்ளிரவு முதல் அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு இன்று (15) நள்ளிரவு முதல் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
உணவகங்களுக்கு மாதத்திரம் அவற்றின் கொள்ளளவில் 50% எண்ணிக்கையானோரை மாத்திரம் கொவிட் சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
இதேவேளை, அனைத்து திருமண நிகழ்வுகளும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கொவிட்-19 ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவரான இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளார். (KandyTamilNews)

Post a Comment