கொவிட்19 வைரஸ் தீவிரமாக பரவிவரும் தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முழுமையாக முடக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் அவசரக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

டெல்டா பிறழ்வின் தொற்று பரவியுள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு ஏனும் நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கையை விடுத்துள்ளார்கள்.

இதுதொடர்பாக அவர்கள் ஜனாதிபதிக்கு எழுத்துமூல கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

சுகாதாரத் தரப்புகளின் கரிசணைகளை கவனத்திற்கொண்டு  உடன் அமுலாகும் வகையில் நாட்டை முழுமையாக முடக்குமாறும் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். (KandtTamilNews)




Post a Comment

Previous Post Next Post