நீண்டகாலமாக வளர்ப்புப் பிராணிகள் துன்புறுத்தப்படுவதாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, வளர்ப்பு யானைகளின் வேலை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான விதிமுறைகளை இலங்கை முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.
பயிற்றப்பட்ட யானைகள் செல்வந்தர்கள் மற்றும் பௌத்த விஹாரைகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
பயிற்றுவிக்கப்பட்ட யானைகளின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் முறைப்படுத்தல் தொடர்பாக 2021 ஆகஸ்ட் 19 ஆம் திகதி வௌியிடப்பட்ட முதலாம் இலக்க வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விதிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன.
- மிருகமொன்றை பராமரிக்கும் போது அதன் பாகன் போதைப்பொருள் அல்லது மதுபோதையில் இருக்க முடியாது
- மரபணு (DNA) விபரங்களுடன் கூடிய உயிர்மரபணுவியல் (Biometric) அடையாள அட்டை மற்றும் இடது, வலது புறங்களுடன் நான்கு நிழற்படங்கள், தலை மற்றும் தண்டு மற்றும் பின்புறம் முழு வால் தெரியக்கூடியவாறு.
- ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உடல்நலப் பரிசோதனை
- ஒரு நாளைக்கு அதிகபட்சம் நான்கு மணிநேர வேலை
- இரவு வேளையில் கடமை இல்லை
- 60 வயதை அடைந்த பிறகு வேலை வாங்கமுடியாது.
- நோய்வாய்ப்பட்டால் வரம்பற்ற விடுப்பு
- ஐந்து வயதிற்குட்பட்ட யானைகளை வேலைக்கு அமர்த்த முடியாது
- கர்ப்பிணி யானைகளிடம் வேலை வாங்க முடியாது,
- கர்ப்பிணி யானைகளுக்கு இரண்டு வருட மகப்பேறு விடுப்பு
- நான்கு மணி நேரத்திற்கு மேல் வாகனங்களை இழுத்துச் செல்ல முடியாது
- தொலைக்காட்சி அல்லது சினிமா தயாரிப்புகள் அரசாங்கத்தின் இல்லாதபட்சத்தில் நடிப்பு வேடங்கள் இல்லை
- ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சக்கரங்கள் கொண்ட டிரக்கில் மட்டுமே உள்நாட்டில் யானைகளைப் போக்குவரத்தில் ஈடுபடுத்த முடியும்.
- யானையை கொண்டுசெல்லும் ஹாலிங் டிரக் 30 கிமீ வேகத்தை தாண்டக்கூடாது
- தினமும் குறைந்தபட்சம் இரண்டரை மணிநேரம் குளிக்கச் செய்ய வேண்டும்
- தினசரி ஐந்து கிலோமீட்டருக்கும் குறையாத நடைபயிற்சி வழங்குதல்.
- எடுத்துச் செல்லப்படும் சுமை விலங்குகளின் உடல் எடையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக இருக்க வேண்டும்
- ஒரு நேரத்தில் ஒரு விலங்கு மீது சவாரி செய்ய அதிகபட்சம் நான்கு நபர்களுக்கு அனுமதி.
- உயர் மின்னழுத்த அலங்கார மின்குமிழ்களை பொருத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
- யானைகளுக்கு கூர்மையான ஆயுதங்கள், தீ அல்லது மயக்க மருந்து எதுவும் பயன்படுத்தப்படக் கூடாது
- காணாமல் போன யானையை எவரேனும் கண்டால் அருகில் உள்ள பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
(KandyTamilNews)

Post a Comment