ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் 38 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
சட்டவிரோத ஒன்றுகூடல், தேசிய பாதைகள் சட்டத்தின் கீழ் பிரதான வீதியை மறித்தமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளின் பிரகாரம் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிராதன வீதியை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 13 பெண்களும், 25 ஆண்களும் அடங்கியுள்ளனர்.
பொலிஸாரின் அறிவுத்தலை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் குழப்பம் விளைவித்துள்ளதாக பொலிஸார் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டக்கார்களின் 10 வாகனங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Kandy Tamil News)

Post a Comment